தேசியக் கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஒடிசா அரசு
புவனேஸ்வர்: ஒடிசா மாநில அரசு, கல்விமுறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, அரசு நடத்தும் பல்கலைக்கழகங்கள், இணைப்புக் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டு முதல் தேசியக் கல்விக் கொள்கை (NEP 2020) அமல்படுத்தப்படும்.மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி இவ்வாறு முடிவெடுத்ததாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில், “உயர்கல்வி முறையை மிகவும் தரமானதாக மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசியக் கல்விக் கொள்கையின்படி, வழக்கமான மூன்றாண்டுப் பட்டப் படிப்புகளுக்குப் பதிலாக நான்கு ஆண்டு இளங்கலைப் பட்டப்படிப்புகள் தொடங்கப்படும். இதில் சேரும் மாணவர்கள், ஒவ்வோர் ஆண்டையும் நிறைவுசெய்த பிறகு, பட்டயம், பட்டம், கௌரவ பட்டம் ஆகியவற்றுக்கான சான்றிதழ்களைப் பெறலாம் என்று அறிக்கை கூறியது.பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மாநில அரசு கூடுதல் தகுதிகளுக்கான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது என்றும் இதன்கீழ் மாணவர்கள் திறன் மேம்பாடு, உள்ளகப் பயிற்சி, சமூக சேவை போன்றவற்றை மேற்கொள்வர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.“மாணவர்களே தங்கள் பாடங்களைத் தேர்வுசெய்யவும் ‘இடைநிற்றல், மீண்டும் சேருதல்’ விருப்பத்தைப் பயன்படுத்தி ஏழு ஆண்டுகளுக்குள் பட்டப் படிப்பை முடிக்கவும் இந்தத் திட்டம் உதவும்,” என்று அந்த அறிக்கை கூறுகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
