நிதிஷ்: இனி தேசிய ஜனநாயகக் கூட்டணியைவிட்டு விலகேன்
புதுடெல்லி: பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் இனி நான் நிரந்தரமாகத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருப்பேன். ஏற்கெனவே ரஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி சேர்ந்ததன் மூலம் இரண்டு முறை தவறு செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.பீகார் மாநிலத்தில் தராரி, ராம்கா், பெலாகஞ்ச், இமாம்கஞ்ச் ஆகிய நான்கு பேரவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (13.11.2024)இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. தராரி தொகுதியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் விஷால் பிரசாந்த் (பாஜக) போட்டியிடுகிறாா். அவருக்கு ஆதரவாக சனிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் நிதீஷ் குமாா் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆட்சியில் இருந்தபோது, ஏராளமான வகுப்புவாத மோதல்கள் நடந்தன. அந்த நிலை, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் முழுமையாக மாறியுள்ளது. இருப்பினும், ராஷ்ட்ரிய ஜனதா தளம், பீகார் மக்களிடையே பிளவை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. நடக்கவிருக்கும் இடைத்தோ்தலில் ‘இண்டியா’ கூட்டணிக் கட்சிகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவா் என்றாா் நிதீஷ் குமாா். பீகாரில் தராரி உள்ளிட்ட நான்கு பேரவைத் தொகுதிகளில் சட்ட மன்ற உறுப்பினர்களாக இருந்தவா்கள், கடந்த மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் பதவி விலகினா். இதையடுத்து, அந்த நான்கு தொகுதிகளுக்கும் இடைத்தோ்தல் நடைபெறுகிறது. வாக்குகள் நவம்பர் 23ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகளும் அறிவிக்கப்படும்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
