டுட்டர்டே மீது மனித உரிமைக் அமைப்பிடம் புகார்
மணிலா: முன்னாள் பிலிப்பீன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டர்டே மீது ஐக்கிய நாட்டு மனித உரிமைகள் அமைப்பிடம் (United Nations Human Rights Committee) புகார் பதிவுசெய்யப்பட்டுள்ளது.பிலிப்பீன்சில் 2021ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு காவல்துறை நடவடிக்கைகளில் கொல்லப்பட்ட ஊழியர்கள், கிளர்ச்சியாளர்களின் குடும்பத்தார் வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 8) புகாரைப் பதிவுசெய்தனர். திரு டுட்டர்டே, முன்னாள் பிலிப்பீன்ஸ் தேசிய காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் மீது புகார் தரப்பட்டுள்ளது.பிலிப்பீன்ஸ், 1966ஆம் ஆண்டில் ஐக்கிய நாட்டுச் சபையின் அனைத்துலக சிவில், அரசியல் உரிமைகளுக்கான (UN International Covenant on Civil and Political Rights) சாசனத்தில் கையெழுத்திட்டது. திரு டுட்டர்டே, முன்னாள் பிலிப்பீன்ஸ் தேசிய காவல்துறைத் தலைவர் குவியமோர் எலியாஸார், முன்னாள் கர்னல் லிட்டோ பத்தாய் ஆகியோர் அந்த சாசனத்துக்கு மாறாக நடந்துகொண்டதாக பெண்கள் இருவர் புகார் கொடுத்தினர்.திரு டுட்டர்டே, போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது மணிலாவில் அவர் பணியில் ஈடுபடுத்திய ‘டாவோ பாய்ஸ்’ (Davao Boys) என்றழைக்கப்படும் காவல்துறையினர், மக்களுக்கு எதிராக புரிந்த குற்றங்களுக்குப் பொறுப்பேற்கச் செய்யாமல் ஓயப்போவதில்லை என்று புகார் தந்த பெண்களில் ஒருவரான லீஸல் அசுன்சியோன் கூறினார்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
