அரிஸோனாவிலும் டிரம்ப் வெற்றி
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் அரிஸோனா மாநிலத்திலும் டோனல்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.அதன்மூலம், வெற்றியைத் தீர்மானிக்கக்கூடிய ஏழு மாநிலங்களிலும் ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் துணை அதிபருமான கமலா ஹாரிஸை அவர் தோற்கடித்துள்ளார்.மிச்சிகள், பென்சில்வேனியா, ஜார்ஜியா, நார்த் கேரோலைனா, விஸ்கோன்சின், நெவாடா, அரிஸோனா ஆகிய ஏழு மாநிலங்கள் டிரம்ப் அல்லது கமலா ஹாரிஸ் ஆகிய இருவரின் வெற்றியைத் தீர்மானிக்கக்கூடிய மாநிலங்களாக இருந்தன.2020 தேர்தலில் இந்த ஏழு மாநிலங்களில் நார்த் கேரோலைனா தவிர இதர ஆறு மாநிலங்களிலும் டிரம்ப் தோல்வியைத் தழுவினார்.தற்போது முடிவுகள் தலைகீழாக மாறி, ஏழு மாநிலங்களிலும் டிரம்ப் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அதிபராகத் தேர்வுபெறத் தேவையான 270 தேர்வாளர் குழு வாக்குகளை அவர் ஏற்கெனவே பெற்றுவிட்டார். வாக்கு எண்ணிக்கை இன்னும் சில மாநிலங்களில் தொடருகிறது. அந்த வரிசையில் அரிஸோனா மாநில வாக்கு எண்ணிக்கை முடிவுற்று முடிவுகள் வெளியிடப்பட்டன. இதுவரை பெற்ற வெற்றிகள் மூலம் டிரம்ப்புக்கு 312 தேர்வாளர் குழு வாக்குகள் கிடைத்துள்ளன. எதிர்த்துப் போட்டியிடட திருவாட்டி ஹாரிசுக்குக் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை 226. ஒட்டுமொத்தமாக, நாடு முழுவதும் டிரம்ப்புக்கு 74.6 மில்லியன் வாக்குகளும் (50.5%) திருவாட்டி ஹாரிசுக்கு 70.9 மில்லியன் வாக்குகளும் (48%) கிடைத்திருப்பதாக அசோஷியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
