தேர்தலில் போட்டியிடும் கணவருக்கு நிதி திரட்டும் நடிகை
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் நவம்பர் 20ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்குள்ள அணுசக்தி நகர் தொகுதியில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) சார்பில் பகத் அகமது என்பவர் போட்டியிடுகிறார். இவர், பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கரின் கணவராவார். இந்நிலையில், தனது கணவருக்கு ஆதரவாக பொது நிதிதிரட்டுத் தளம் மூலம் நிதி திரட்டும் முயற்சியை ஸ்வரா பாஸ்கர் எடுத்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மக்கள் மேம்பாட்டுக்காக உழைக்கும், படித்த, முற்போக்கான இளம் தலைவரான எனது கணவர் பகத் அகமது அணுசக்தி தொகுதியில் வெற்றிபெற தாராளமாக நன்கொடை வழங்கி ஆதரியுங்கள்,” என்று பதிவிட்டுள்ளார். பகத் அகமது முன்னதாக அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியில் இருந்தார். இந்நிலையில், அண்மையில் அவர் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
