ஜோகூர் கடற்கரையில் திரளும் கூட்டம்; குடியிருப்பாளர்கள் வருத்தம்
ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் பாரு நகரில் உள்ள ஸ்துலாங் லாவுட் (Stulang Laut) எனும் பகுதியை தாய்லாந்தின் பிரபல சுற்றுலாத்தலமான கோ சாமுய்யுடன் (Koh Samui) ஒப்பிடும் காணொளி ஒன்று டிக்டாக் சமூக ஊடகத் தளத்தில் பதிவேற்றம் செய்யபப்ட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கடற்கரைப் பகுதியான ஸ்துலாங் லாவுட்டைப் படமெடுக்கப் பலர் அங்கு சென்று வருகின்றனர். அதற்காக அவர்கள் குறுகிய சாலையில் தங்கள் வாகனங்களை நிறுத்தி வைப்பது அப்பகுதி குடியிருப்பாளர்களைக் கோபப்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் ஜாலான் பெர்தானா சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருவதாக குடியிருப்பாளர்கள் சிலர் குறை கூறுகின்றனர். சிங்கப்பூரைப் பார்த்தபடி இருக்கும் ஸ்துலாங் லாவுட், கோ சமுய்யைப் போல் அறவே இல்லை என்று வேறு சிலர் கூறினர்.வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்படுவதால் சாலை மேலும் குறுகலாய் ஆவதாக குடியிருப்பாளர்கள் வருத்தம் தெரிவித்தனர்.வாகனங்களை சீரற்ற முறையில் நிறுத்த வேண்டாம் என்று ஜோகூர் பாரு மேயர் முகம்மது நூரஸாம் ஒஸ்மான், ஸ்துலாங் லாவுட்டுக்குச் செல்வோரைக் கேட்டுக்கொண்டுள்ளார். தன்னைத் தொடர்புகொண்டபோது அவர் அவ்வாறு சொன்னார்.சம்பந்தப்பட்டப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் இருப்பதாகவும் எச்சரிக்கைக்குப் பின்னரும் இடம் மாற்றாமல் இருக்கும் சரியாக நிறுத்தப்படாத வாகனங்கள் வலுக்கட்டாயமாக அகற்றப்படலாம் என்றும் அவர் கூறினார்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
