காருக்கு இறுதிச் சடங்கு செய்த இந்தியத் தொழிலதிபர்
அகமதாபாத்: தாம் அதிர்ஷ்டமிக்கது என்று கருதிய காருக்கு இறுதிச் சடங்கு செய்து, அதனை நல்லடக்கம் செய்தார் இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர்.சஞ்சய் போல்ரா எனும் அவர், கடந்த 2006ஆம் ஆண்டு சொகுசு கார் ஒன்றை வாங்கினார். அதன்பிறகு அவர் தமது வாழ்வில் ஏற்றங்களையே சந்தித்தார். அந்தக் கார் வந்தபின்னரே அதெல்லாம் நடந்தது எனக் கருதிய அவர், அதனைத் தம் குடும்பத்தில் ஒருவரைப்போல் கருதினார்.இந்நிலையில், அந்தக் காரை வாங்கி 18 ஆண்டுகளாகிவிட்டதால் அதனை வேறு யாருக்கும் தராமல், அடக்கம் செய்து சமாதி எழுப்ப சஞ்சய் முடிவுசெய்தார்.இதற்காக, 2,000 அழைப்பிதழ்களையும் அச்சிட்டு, அவர் தமது கிராம மக்களுக்கு அழைப்பு விடுத்தார். வியாழக்கிழமை (நவம்பர் 7) நடந்த அந்நிகழ்வில் தடபுடல் விருந்தும் பரிமாறப்பட்டது.மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சஞ்சயின் கார் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அவருக்குச் சொந்தமான தோட்டத்தில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு, புதைக்கப்பட்டது. இந்த விந்தையான நிகழ்வு உள்ளூர்வாசிகளிடமும் வரவேற்பு பெற்றது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
