டிரம்ப் வென்றதால் மகிழ்ச்சியில் இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறை
புதுடெல்லி: டோனல்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவிருப்பது இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையினருக்கு மகிழ்ச்சி அளித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.அமெரிக்கக் குடிநுழைவுச் சட்ட விதிகளில் கடுமையான மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்பிருந்தாலும் இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையினரிடம் நம்பிக்கை மேலோங்கியுள்ளது. டிரம்ப் கடந்த முறை அதிபராக இருந்தபோது எச்-1பி விசா ஊழியர்களின் ஊதியமும் விசா கட்டணமும் அதிகரித்தன. இப்போதைக்கு 85,000 எச்-1பி விசாக்கள் வழங்கப்பட்டுவரும் நிலையில், டிரம்ப் நிர்வாகம் அதனை மறுபரிசீலனை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடுமையான பரிசீலனைக்கு பிறகே எச்-1பி விசா விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. டிரம்ப்பின் முன்னைய ஆட்சிக்காலத்தின்போது, அதற்குமுன் இல்லாத வகையில், எச்-1பி விசா விண்ணப்பங்கள் நிராகரிப்பு 24 விழுக்காடாக உயர்ந்தது. இப்படிப் பல கவலைகள் இருந்தாலும், டிரம்ப்பின் வெற்றியை அடுத்து தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு விலைகள் ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், டிரம்ப்பின் மறுவருகை இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையினருக்கு நம்பிக்கை அளித்துள்ளதற்கு நான்கு அம்சங்கள் முக்கியக் காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன. முதலாவதாக, அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவது. பெரும்பாலான இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் டாலரிலேயே வருவாய் ஈட்டுகின்றன. அதே நேரத்தில், அவரது நடைமுறைச் செலவுகள் இந்திய ரூபாயில் மேற்கொள்ளப்படுகின்றன. அடுத்ததாக, செனட் சபை, அமெரிக்க நாடாளுமன்றம், அரசாங்கம் என அனைத்திலும் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியின் கை ஓங்கியிருப்பதால் கொள்கை முடிவுகள் நிலையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவதாக, பெருநிறுவனங்களுக்கான வரியை 21 விழுக்காட்டிலிருந்து 15 விழுக்காடாகக் குறைக்க வேண்டும் என்பது டிரம்ப்பின் பரிந்துரை. இது, அமெரிக்காவில் பதிவுசெய்துள்ள இந்தியத் தொழில்முனைவர்களுக்கும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் பயனளிக்கும். இறுதியாக, கடந்த முறை போலவே இம்முறையும் சீனாவிற்கு எதிராக டிரம்ப் கடுமையான நிலைப்பாட்டை கையிலெடுப்பார் என எதிர்பார்க்கப்படுவதால், அமெரிக்காவிலிருந்து அதிகமான முதலீடு இந்தியாவிற்கு வரலாம். இதனால், செயற்கை நுண்ணறிவு, பகுதி மின்கடத்திகள் போன்ற நவீன தொழில்நுட்பங்களில் அமெரிக்க முதலீடு அதிகரிக்கக்கூடும்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
