வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த ரூ.588 கோடி பணம் பறிமுதல்
மும்பை: ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் 14 மாநிலங்களில் இடைத் தேர்தலும் இம்மாதம் நடக்கவுள்ளது.அந்த தேர்தல்களுக்காக வாக்காளர்களுக்கு வழங்குவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.588 கோடி மதிப்பிலான பணம், பரிசுப்பொருள், மதுபானங்கள் மற்றும் போதைப்பொருள்கள் ஆகியவற்றை இந்தியத் தேர்தல் ஆணையம் கைப்பற்றியது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபின் வாக்காளர்களைக் கவர கட்சிகள் பணம் கொடுக்க முயற்சி செய்யும். அதைத் தீவிரமாகக் கண்காணித்து தடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தியது. அதன்படி அதிகாரிகள் பல குழுக்களை அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.மகாராஷ்டிராவில் ரூ.90.5 கோடி மதிப்பில் விலையுயர்ந்த ஆபரணப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. ரொக்கமாக ரூ.73.1 கோடி கைப்பற்றப்பட்டது. மது மற்றும் போதைப் பொருள்கள் ரூ.38 கோடி மதிப்பில் கைப்பற்றப்பட்டன. வாக்காளர்களுக்குப் பரிசாக வழங்கப்படவிருந்த ரூ.42.5 கோடி மதிப்பிலான பொருள்கள் கைப்பற்றப்பட்டன.ஜார்க்கண்ட்டில் ரூ.128 கோடி மதிப்பில் இலவச பரிசுப் பொருள்கள், ரூ.10.5 கோடி ரொக்கம், ரூ.7.1 கோடி மதிப்பிலான மது பானங்கள், ரூ.4.2 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருள்கள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட 2 மக்களவைத் தொகுதிகள், 48 சட்டமன்றத் தொகுதிகளில் ரூ.70.6 கோடி மதிப்பிலான பொருள், ரூ.21.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள், ரூ.9.4 கோடி மதிப்பில் தங்கம் என மொத்தம் ரூ.118 கோடிக்கு பறிமுதல் செய்யப்பட்டன.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
