விடுப்பு கிட்டாததால் இணையம்வழி மணமுடித்த வெளிநாடுவாழ் இந்தியர்
ஷிம்லா: வெளிநாட்டில் பணியாற்றும் இந்திய ஆடவர் ஒருவருக்கு விடுப்பு கிடைக்காததால், தமக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை இணையம் வழியாக அவர் திருமணம் செய்துகொண்டார்.இமாச்சலப் பிரதேச மாநிலம், பிலாஸ்பூரைச் சேர்ந்த அட்னன் முகம்மது என்ற அந்த ஆடவர் துருக்கியில் பணியாற்றி வருகிறார். அவருக்கும் இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில், திருமணத்திற்காகத் தாய்நாடு செல்ல அட்னன் விடுப்பு கேட்டபோது, அவரது கோரிக்கையை ஏற்க அவர் பணிபுரிந்துவரும் நிறுவனம் மறுத்துவிட்டது. இதனிடையே, மணப்பெண்ணின் தாத்தாவிற்கு உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டது. தாம் கண்மூடுவதற்குள் தம் பேத்தியின் திருமணத்தைப் பார்க்கவேண்டும் என்று அவர் கட்டாயப்படுத்தினார்.இதனையடுத்து, இணையம் வழியாகத் திருமணத்தை நடத்துவது என இருவீட்டாரும் முடிவுசெய்தனர். அதன்படி, கடந்த திங்கட்கிழமை (நவம்பர் 4) அவர்களது திருமணம் இணையம்வழி நடந்தேறியது. காணொளி வழியே தோன்றிய மணமகனும் மணமகளும், தாங்கள் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்வதாக மும்முறை கூறி, தங்களது திருமண உறவை உறுதிசெய்தனர். நவீன தொழில்நுட்பத்தால் அத்திருமணம் சாத்தியமானது என்றார் பெண்ணின் உறவினரான அக்ரம் முகம்மது. கடந்த ஆண்டும் இமாச்சலப் பிரதேசத்தில் இதுபோல் காணொளி வழியாக ஒரு திருமணம் நடந்தேறியது. நிலச்சரிவாலும் திடீர் வெள்ளத்தாலும் திருமண மண்டபத்தைச் சென்றடைய முடியாததால், ஆஷிஷ் சிங்கா - ஷிவானி தாக்குர் இருவரும் இணையம் வழியாகத் திருமணம் செய்துகொண்டனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
