நோவா அணியை 8-0 என நோகடித்த செல்சி
லண்டன்: கான்ஃபரன்ஸ் லீக் கிண்ணத்தில் செல்சி அணி ஆர்மினியாவைச் சேர்ந்த நோவா அணியை 8-0 என்ற கோல் கணக்கில் புரட்டி எடுத்தது.நவம்பர் 7ஆம் தேதி பின்னிரவுக்கு பின் நடந்த இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே செல்சி அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 12, 13, 18, 21 நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்த செல்சி அணி நோவா அணியை சிதைத்தது. கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் கோல் ஏதும் கொடுக்காமல் விளையாடிய நோவா குழு 39, 41வது நிமிடங்களில் இரண்டு கோல்கள் போட விட்டுக்கொடுத்தது.ஆட்டத்தின் முதல் பாதியில் 6-0 என்று முன்னிலை பெற்றது செல்சி. இரண்டாவது பாதியிலும் கோல் மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் நோவா குழு சற்று தாக்குப்பிடித்து விளையாடியது. ஆனாலும் அதனால் கோல்களை தடுக்க முடியவில்லை. 69வது நிமிடத்தில் ஏழாவது கோலை அடித்த செல்சி 76வது நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பையும் கோலாக மாற்றியது. செல்சியின் ஜோ ஃபெலிக்ஸ், கிறிஸ்ஃடபர் குன்கு தலா இரண்டு கோல்கள் அடித்தனர். கான்ஃபரன்ஸ் லீக் கிண்ணத்தின் புள்ளிப் பட்டியலில் செல்சி அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
