ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு: 2 வீரர்கள், 4 தீவிரவாதிகள் மாண்டனர்
ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு வெவ்வேறு இடங்களில் இரண்டு தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தன. இந்தத் தாக்குதலில் 4 தீவிரவாதிகளும் 2 ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜம்மு காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தின் மாடர்கம் என்னும் சிற்றூரில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல்துறையினரும் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடர்ந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதையடுத்து காவல்துறை, பாதுகாப்புப் படையினர் ஆகியோரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சூட்டு சண்டையில் 4 தீவிரவாதிகளும் 2 ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர். மேலும் நான்கு தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக நம்பப்படுகிறது. அவர்களைத் தேடும் நடவடிக்கையை பாதுகாப்புப் படை முடுக்கிவிட்டுள்ளது. மாடர்கம் சிற்றூரில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் கடுமையான துப்பாக்கிச் சூடு நடந்தது. அப்போது ஒரு வீட்டிற்குள் தீவிரவாதிகள் ஒளிந்திருப்பதாக தகவல் கிடைத்து, அந்த வீட்டை முற்றுகையிட்டு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அதற்கு முன்னதாக நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சண்டையில் படை வீரர் ஒருவர் குண்டடிபட்டு, சிகிச்சையின்போது மரணமடைந்தார் என்று கூறப்படுகிறது. கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவர் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் உயர்மட்ட தளபதியாக இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.கடந்த ஜூலை 15ஆம் தேதி காஷ்மீரில் இந்திய அரசுக்கு எதிராகப் போராடி வரும் தீவிரவாதிகளுடன் தோடா மாவட்ட காடுகளில் நடந்த இந்திய பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் நடந்த சண்டையில் நான்கு படை வீரர்கள் கொல்லப்பட்டனர். நேற்று நடந்த சம்பவத்துடன் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 21 பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
