தெலுங்கு சமூகத்திற்குப் பெருமை சேர்க்கும் தருணம்: உஷா வேன்சுக்கு ஆந்திர முதல்வர் வாழ்த்து
அமராவதி: அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபராக ஜே.டி.வேன்ஸ் வெற்றி பெற்றதற்கு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அமெரிக்காவின் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.டி.வேன்சுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெற்றியின் மூலம் வேன்சுவின் மனைவியும் ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்டவருமான உஷா வேன்சை அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியாக மாற்றியுள்ள வரலாற்றுத் தருணம் நிகழ்ந்துள்ளது,” எனச் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.“அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியாகப் பணியாற்றும் முதல் தெலுங்கு பாரம்பரிய பெண் என்ற பெருமையைத் திருவாட்டி வேன்ஸ் பெற்றிருக்கிறார். உலகெங்கிலும் உள்ள தெலுங்கு சமூகத்தினர் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் தருணம் இது. ஜே.டி.வேன்ஸ் - உஷா வேன்ஸ் தம்பதியை ஆந்திராவுக்கு வருமாறு அழைக்கும் வாய்ப்பினை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்,” என அந்தப் பதிவில் மேலும் அவர் கூறியுள்ளார்.அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜே.டி.வேன்சின் மனைவி உஷா மற்றும் அவரது குடும்பத்தினர் ஆந்திராவைப் பூர்வீகமாக கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.முன்னதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக டோனல்ட் டிரம்ப்புக்கு வாழ்த்துகள் கூறிய ஆந்திர முதல்வர், இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகிய இருவரின் தலைமையில் இரு நாடுகளும் அதிக ஒத்துழைப்பை வளர்க்கும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.மேலும், “டிரம்பின் வெற்றியால் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு மேலும் வலுப்படும். டிரம்ப் கூறியது போல் தனது நாட்டை முன்னோக்கி வழிநடத்தத் தயாராகி வருகிறார். அந்த முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துகள். அவரது முதல் பதவிக்காலத்தில் இந்திய-அமெரிக்க கூட்டுறவு வலுவாக இருந்தது,” என்றார் ஆந்திர முதல்வர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
