பிணையில்லாக் கல்விக் கடன் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புதுடெல்லி: தகுதியான மாணவர்களுக்குக் கல்விக் கடன் பெற வழிவகுக்கும் ‘பிரதமரின் வித்யாலட்சுமி’ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.உயர் கல்வி பெறுவதில் மாணவர்களுக்குப் பணப்பிரச்சினை ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கில் இந்தப் புதிய திட்டம் வகுக்கப்பட்டதாகவும் ரூ.3 ஆயிரத்து 600 கோடி மதிப்பீட்டில் இதைச் செயல்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.“பிஎம் வித்யாலட்சுமி திட்டத்தின்கீழ், நாட்டின் தலைசிறந்த 860 உயர்கல்வி நிறுவனங்களில் பயில சேர்க்கை ஆணைப் பெறும் அனைத்து மாணவர்களும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றிடமிருந்துப் பிணையில்லாமல் கல்விக் கடன் பெற முடியும். முழு கல்விக் கட்டணம், படிப்பு சார்ந்த இதர செலவுகள் போன்றவை இதில் அடங்கும்,” எனச் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அமைச்சர் தெரிவித்தார்.இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது குறித்து பிரதமர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “உயர் கல்விக்கான அணுகலுக்கு மிகப் பெரிய ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் இளைஞர் சக்திக்கு அதிகாரமளித்து, தேசத்தின் பிரகாசமான எதிர்காலத்தைக் கட்டமைப்பதில் அரசாங்கம் மேற்கொள்ளும் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று,” எனக் குறிப்பிட்டுள்ளார்.எளிய, வெளிப்படையான, மாணவர்களுக்கு ஏற்ற எளிய நடைமுறைகளின் மூலம் முற்றிலும் மின்னிலக்க முறையில் செயல்படுத்தப்படும் திட்டம் இதுவாகும். மேலும், இந்தியாவின் தகுதிவாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இத்திட்டம் பயனளிக்கும். இத்திட்டம் கல்விக் கடன், வட்டி மானியம் உள்ளிட்ட பல பயன்களைக் கொண்டது.பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்திற்கான ஒருங்கிணைந்த இணையத்தளத்தில் மாணவர்கள் உயர்கல்விக்கான கல்விக் கடன், வட்டி மானியம் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்திய இளைஞர்களுக்கு தரமான உயர்கல்வியை இத்திட்டம் உறுதிசெய்யும் என்பதுடன் தொழில்நுட்பக் கல்வியில் உயர்கல்வியைத் தொடர தகுதியான அனைத்து மாணவர்களுக்கும் முழுமையான ஆதரவை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
