நொடித்துப்போன ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தைக் கலைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: நிதி நெருக்கடியால் நொடித்துப்போன ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்தைக் கலைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடன், கடுமையான நிதி நெருக்கடி ஆகியவற்றின் காரணமாக 2019ஆம் ஆண்டு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது சேவையை நிறுத்தியது. அந்நிறுவனத்தை மீட்டெடுக்கும் பொருட்டு 2021ஆம் ஆண்டு தீர்வுத் திட்டங்கள் வகுக்கப்பட்டன. அதன்படி, ஜலான் கல்ராக் கூட்டு நிறுவனம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்கியது. இதற்காக முதல் தவணையாக ரூ. 350 கோடி செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், அந்நிறுவனம் ரூ. 200 கோடியை மட்டும் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய எஸ்பிஐ, கனரா வங்கி ஆகியவற்றின் நிபந்தனைகளைப் பின்பற்றத் தவறியதாக ஜலான் கல்ராக் நிறுவனம்மீது குற்றம்சுமத்தப்பட்டது.இதுதொடர்பான வழக்கில், விசாரணை நிறைவடைந்த நிலையில் வியாழக்கிழமை (நவம்பர் 7ஆம் தேதி) தீர்ப்பு வழங்கப்பட்டது.தீர்வுத் திட்டங்கள் தோல்வி அடைந்ததையடுத்து தற்போதைய மோசமான நிதிச் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, அரசியலமைப்பின் 142வது பிரிவின் கீழ் உள்ள சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கலைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
