இத்தாலியில் 100 வயதைக் கடந்தோர் எண்ணிக்கை 30% அதிகரிப்பு
ரோம்: இத்தாலியில் 100 வயதைக் கடந்த முதியோர் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் 30 விழுக்காடு அதிகரித்துள்ளது.அந்நாட்டில் குழந்தைப் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.இத்தாலியின் தேசியப் புள்ளிவிவரப் பிரிவு வியாழக்கிழமை (நவம்பர் 7) வெளியிட்ட அறிக்கையில், இந்த ஆண்டு 100 வயதுக்கும் 104 வயதுக்கும் இடைப்பட்ட இத்தாலியர்களின் எண்ணிக்கை 22,000க்கும் அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.ஒப்புநோக்க, 2014ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 17,000ஆகப் பதிவானது.முதியோரில் 81 விழுக்காட்டினர் பெண்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது.இந்த ஆண்டு 110 அல்லது அதைவிட அதிக வயதானோரின் எண்ணிக்கை 21. அவர்களில் ஒருவர் மட்டுமே ஆண். 2009ஆம் ஆண்டு இத்தகைய பத்துப் பேர் மட்டுமே இருந்ததாகக் கூறப்பட்டது.இத்தாலியில் மூப்படையும் மக்கள்தொகையால் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. ஓய்வூதியம், சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றுக்காக அரசாங்கம் அதிகம் செலவிட நேரிட்டுள்ளது.இத்தாலியின் ஆக வயதானவராகக் கருதப்படுபவர் 114 வயதான பெண்மணி ஆவார். ஆண்களில் ஆக முதியவருக்கு வயது 110.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
