2024 உலகின் ஆக வெப்பமான ஆண்டாக அமையும்: விஞ்ஞானிகள்
பிரசல்ஸ்: உலகின் ஆக வெப்பமான ஆண்டாக 2024ஆம் ஆண்டு பதிவாகக்கூடும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘கோப்பர்நிக்கஸ்’ பருவநிலை மாற்றத்திற்கான சேவை அமைப்பு கூறியுள்ளது. அஸர்பைஜானில் அடுத்த வாரம் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ‘கோப்29’ பருவநிலை மாநாடு நடைபெறவிருப்பதை முன்னிட்டு, அந்தப் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டன. அந்த மாநாடு, பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க அதிகமான நிதியை ஒதுக்குவதற்கு வெவ்வேறு நாடுகளை ஒப்புக்கொள்ள முயற்சி செய்யும். அமெரிக்க அதிபர் தேர்தலில் டோனல்ட் டிரம்ப்பின் வெற்றி, அந்தப் பேச்சுகளுக்கான எதிர்பார்ப்பைக் குறைத்துள்ளது. ஜனவரியிலிருந்து அக்டோபர் வரை, சராசரி உலக வெப்பநிலை மிக அதிக அளவில் பதிவாகியுள்ளதால், இவ்வாண்டு ஆக வெப்பமான ஆண்டாக அமையும் என்பதில் ஐயமில்லை என்று அமைப்பு கூறியது. எஞ்சியுள்ள மாதங்களில் சராசரி வெப்பநிலை கிட்டத்தட்ட பூஜ்ஜியமாகப் பதிவானால் மட்டுமே, அந்த நிலை மாறும் என்று அமைப்பு தெரிவித்தது. “இவ்வாண்டின் வெப்பநிலைக்கு பருவநிலை மாற்றமே அடிப்படைக் காரணம்,” என்று அமைப்பின் இயக்குநர் கார்லொ புவன்டெம்போ கூறினார். “பொதுவாகவே பருவநிலை சூடாகிக் கொண்டிருக்கிறது. அனைத்துக் கண்டங்களிலும், அனைத்துப் பெருங்கடல்களிலும் அது சூடாகி வருகிறது. அதனால், இதுவரை இல்லாத வெப்பநிலைகளைக் காணும் சாத்தியம் நிச்சயம் உள்ளது,” என்றார் அவர்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
