பிரேசிலில் தேள்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் மக்களுக்கு ஆபத்து
சாவ் பாவ்லோ: பிரேசிலியர்கள் அதிகம் கவலைப்பட வேண்டியது, பாம்புகளைப் பற்றியன்று. தேள்களையே.கொடுக்குகள் விஷத்தன்மை என்பதால் அஞ்சப்படும் தேள்களின் எண்ணிக்கை நகரமயமாதல், வெப்பமயமாதல் காரணமாக அதிகரித்து வருகின்றன. பிரேசிலில் பரவலாகக் கண்டறியப்படும் மஞ்சள் நிற தேள், தென்னமெரிக்காவிலேயே ஆக ஆபத்தான தேளாகக் கருதப்படுகிறது. ஆக அண்மைய தரவுகளின்படி, 2023ல் பிரேசிலில் தேள் கொட்டியதில் 152 பேர் உயிரிழந்தனர். ஒப்புநோக்க, பாம்பு கடித்ததால் 140 மரணங்கள் ஏற்பட்டன. 2019ல் தேள் கொட்டியதால் ஏற்பட்ட 95 மரணங்களைவிட இது அதிகம். பிரேசிலின் சுகாதார அமைச்சுத் தரவின்படி, 2023ல் 200,000க்கும் அதிகமான தேள்கொட்டிய சம்பவங்கள் பதிவாகின. பத்து ஆண்டு காலத்துக்கு முன்பிருந்ததைவிட இது 250 விழுக்காடு அதிகம்.மஞ்சள் தேள் கொட்டினால் ஆரோக்கியமான பெரியவர்களுக்கு வலி, வாந்தி, வியர்வை அதிகரிப்பு, நடுக்கம் போன்று லேசான முதல் மிதமான அறிகுறிகள் ஏற்படும். ஆனால் அதிர்ச்சி, நுரையீரலில் நீர்கோத்தல், இதயச் செயலிழப்பு போன்ற கடுமையான அறிகுறிகளும் ஏற்படலாம். இவை சிறார்களுக்கும் முதியவர்களுக்கும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
