பாகிஸ்தானில் புகைமூட்டம்; நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் லாகூர் நகரில் ஒரே நாளில் 900க்கும் அதிகமானோர் புகைமூட்டம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது. சுவாச, தொண்டை பிரச்சினைகளுக்கு உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டியிருந்தவர்களில் குழந்தைகளும் மூத்தோரும் அடங்குவர் என்று மூத்த மாநில அமைச்சர் மரியும் ஓரங்ஸெப் கூறினார். பாகிஸ்தானில் மக்கள்தொகை அதிகம் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரான லாகூரில், குளிர்காலத்தில் ஆபத்து விளைவிக்கக்கூடிய அளவில் புகைமூட்டம் பதிவானது. உலகில் ஆக மோசமான புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்ட நகரங்களில் லாகூரை முதல் நிலையில் வைத்துள்ளது, சுவிஸ் கண்காணிப்பு நிறுவனமான ‘ஐகியூஏர்’. அங்கு, காற்றுத்தரக் குறியீடு 710ஆகப் பதிவானது. புதுடெல்லியில் பதிவான நிலையைக் காட்டிலும் அது ஒரு மடங்கு அதிகம். இந்த வாரத் தொடக்கத்தில், காற்றுத்தரக் குறியீடு 1,100ஐத் தொட்டதாக அமைச்சர் கூறினார். அதனால் பள்ளிகள் மூடப்படவேண்டியிருந்தது; முகக்கவசம் அணியவேண்டியிருந்தது. ஊழியர்களில் பாதிப்பேர் வீட்டிலிருந்து வேலைசெய்யவேண்டிய நிலையும் ஏற்பட்டது. அந்தக் கட்டுப்பாடுகள், அடுத்த பத்து நாள்களுக்கு நடப்பில் இருக்கும். அதன் பிறகு, அரசாங்கம் நிலைமையை மீண்டும் மதிப்பீடு செய்யும்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
