மாதவன் வீட்டில் மங்காத்தா நாயகன்
மாதவனின் துபாய் வீட்டில் நடந்த குடும்ப நிகழ்ச்சியில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டார். இது தொடர்பாக மாதவன் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் காணொளி வெளியிட்டார்.மாதவன், அஜித்குமார் ஆகிய இருவரும் இணைந்து படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இவர்கள் இருவருக்கு இடையிலும் அவர்களின் குடும்பத்தாரிடமும் நல்ல நட்புறவு உள்ளது. அஜித்குமாரின் மனைவி ஷாலினி, மாதவன் ஆகியோர் இணைந்து ‘அலைபாயுதே’ படத்தில் நடித்துள்ளனர். அஜித்தின் குடும்ப நிகழ்வுகளில் மாதவன் தனது குடும்பத்துடன் கலந்து கொள்வது, மாதவனின் குடும்ப நிகழ்வுகளில் அஜித் தனது குடும்பத்துடன் கலந்து கொள்வது என இரண்டு குடும்பங்களுமே மிகவும் நெருக்கமான குடும்பங்களாக உள்ளன. இந்நிலையில்தான் மாதவன் தனது வீட்டில் ஏற்பாடு செய்த குடும்ப நிகழ்ச்சியில் அஜித் கலந்துகொண்டார்.தற்போது அஜித்குமார் ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ படங்களில் நடித்து வருகின்றார். மேலும், ஐரோப்பிய கார் பந்தயமான ‘ஜிடி3’ கார் பந்தையத்திலும் கலந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளார். இதற்காக தீவிரமான பயிற்சியிலும் தனது அணியினருடன் அஜித் ஈடுபட்டு வருகிறார். இந்தப் பயிற்சியை அவர் அபுதாபியில் மேற்கொண்டு வருகிறார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
