விஜய் படத்தின் வெளிநாட்டு உரிமத்தை அதிக விலை கொடுத்து வாங்கியது ‘பார்ஸ் பிலிம்ஸ்’
விஜய் நடித்து வரும் அவரது இறுதிப் படமான ‘விஜய் 69’ படத்தின் வெளிநாட்டு உரிமத்தை ‘தி கோட்’ படத்தின் வெளிநாட்டு உரிமத்தை வாங்கிய அதே நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது. வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள அவரது 69வது படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. அரசியலில் தீவிரமாக இறங்குவதற்கு முன்பாக விஜய்யின் கடைசிப் படமாக இப்படம் அமைய உள்ளது. அதனால், படத்தின்மீது நிறையவே எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அரசியல் கதையாக, அரசியல் பஞ்ச் வசனங்கள் உள்ள படமாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, படத்திற்கான வியாபாரமும் இப்போதே மும்முரமாக நடந்து வருகிறது. இப்படத்தின் வெளிநாட்டு உரிமத்தைப் ‘பார்ஸ் பிலிம்ஸ்’ என்ற நிறுவனம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஏறக்குறைய ரூ.75 கோடி கொடுத்து அந்த உரிமையைப் பெற்றுள்ளார்களாம்.இதற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளிவந்த ‘தி கோட்’ படத்தின் வெளிநாட்டு உரிமையையும் இதே நிறுவனம்தான் வாங்கியிருந்தது. அதன் விலை சுமார் ரூ.70 கோடி வரை இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது கூடுதல் தொகையுடன்தான் ‘விஜய் 69’ படத்தின் உரிமையை வாங்கியுள்ளார்கள்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
