சிட்டியை சாய்த்த ஸ்போர்ட்டிங்
லிஸ்பன்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டியை 4-1 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது போர்ச்சுகலின் ஸ்போட்டிங் சிபி (Sporting CP).இந்த ஆட்டத்தில் ஸ்போர்ட்டிங்கின் விக்டர் கியோகெரெஸ் (Viktor Gyokeres) மூன்று கோல்களைப் போட்டார். ஸ்போர்ட்டிங் நிர்வாகி ரூபன் அமோரிம், இன்னும் சில நாள்களில் சிட்டியின் பரம வைரியான மான்செஸ்டர் யுனைடெட்டின் நிர்வாகியாகப் பொறுப்பேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.ஆட்டம் தொடங்கி சிறிது நேரத்தில் ஃபில் ஃபோடன் சிட்டியை முன்னுக்கு அனுப்பினார். அதற்குப் பிறகு சிட்டி பல கோல் வாய்ப்புகளை நழுவவிட்டதை ஸ்போர்டிங் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது.இறுதியில் சிட்டியைத் திக்குமுக்காடச் செய்தது அக்குழு. காயமுற்றதால் பல விளையாட்டாளர்கள் இல்லாமல் விளையாடிவரும் சிட்டி, தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளது.மற்ற சாம்பியன்ஸ் லீக் ஆட்டங்கள் சிலவற்றில் ஜெர்மனியின் பயர் லெவர்குசனை 4-0 எனும் கோல் கணக்கில் துவைத்தெடுத்தது லிவர்பூல், போட்டியின் நடப்பு வெற்றியாளரான ஸ்பெயினின் ரியால் மட்ரிட், இத்தாலியின் ஏசி மிலானிடம் 3-1 எனும் கோல் கணக்கில் தோல்வியடைந்தது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
