இந்தோனீசியாவின் லக்கி-லக்கி எரிமலை குமுறல்: ஆயிரக்கணக்கானோர் நிரந்தரமாக வெளியேற்றம்
ஜகார்த்தா: லெவோட்டோபி லக்கி-லக்கி (Lewotobi Laki-laki) எரிமலை பலமுறை குமுறியதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களை நிரந்தரமாக இடம் மாற்ற இந்தோனீசிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.அந்த எரிமலைக் குமுறல்களால் குறைந்தது ஒன்பது பேர் மாண்டனர், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். லெவோட்டோபி லக்கி-லக்கி, கிழக்கு நுசா தெங்காரா மாநிலத்தில் ஃபுளோரஸ் தீவில் அமைந்துள்ளது. அது, கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) குமுறியது.பின்னர் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (நவம்பர் 4, 5) அந்த எரிமலை மீண்டும் குறைந்த சீற்றத்துடன் குமுறியது. லெவோட்டோபி லக்கி-லக்கிக்கு ஆக உயரிய எச்சரிக்கை நிலை வழங்கப்பட்டது.வருங்காலத்தில் இந்த எரிமலை இதேபோல் குமுறினால் நிலைமையைக் கையாள குடியிருப்பாளர்களை நிரந்தரமாக இடம் மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளதாக இந்தோனீசியாவின் பேரிடர் அமைப்பின் தலைவர் சுஹார்யாந்தோ புதன்கிழமையன்று (நவம்பர் 6) அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். எரிமலைக்கு ஏழு கிலோமீட்டர் சுற்று வட்டாரத்தில் இருக்கும் குடியிருப்பாளர்களை இடம் மாற்ற அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.எரிமலைக்கு ஆக அருகில் இருக்கும் கிராமங்களில் 16,000க்கும் மேற்பட்டோர் வாழ்கின்றனர். அவர்களில் எத்தனை பேரை நிரந்தரமாக இடம் மாற்றுவது என்பதை அரசாங்கம் கணக்கிட்டு வருகிறது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
