இந்திய ரூபாயின் மதிப்பு முன்னில்லாத அளவு சரிவு
புதுடெல்லி: அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் டோனல்ட் டிரம்ப் ஏறுமுகத்தில் இருந்ததை அடுத்து, புதன்கிழமையன்று (நவம்பர் 06) அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்தது.மாறாக, அதற்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதற்குமுன் இல்லாத அளவிற்கு, அதாவது ஒரு டாலருக்கு 84.25 ரூபாய் எனச் சரிவு கண்டது. பின்னர் அது சற்றே மீண்டு, ஒரு டாலருக்கு 84.18 ரூபாய் என்றானது.உள்நாட்டு உட்கட்டமைப்பிற்கு டிரம்ப் முன்னுரிமை அளிப்பார் என்பதால், நிதி வரம்புகள் கூடி கடன் தேவைகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கடந்த ஜூலையில் இருந்த அளவிற்கு டாலரின் மதிப்பு உயர்ந்துவிட்டது.இதற்கிடையே, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது. இது வளர்ந்துவரும் சந்தைகள் எதிர்கொள்ளும் சவாலான சூழலை வெளிப்படுத்துவதாக உள்ளது. அமெரிக்க நிதிக் கொள்கை இறுக்கம், ஏற்றத்தாழ்வுமிக்க உலகச் சந்தை போன்ற புறச்சூழல்களால் ஏற்படும் அழுத்தங்களும் இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. கடந்த காலத்தில், ரூபாய் மதிப்பை நிலைப்படுத்துவதற்கு அந்நியச் செலாவணிச் சந்தையில் இந்திய ரிசர்வ் வங்கி தலையிட்டது. அதுபோல, இப்போதும் அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவடையுமானால், இம்முறையும் ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் எனக் கூறப்படுகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
