வெற்றிப் பாதைக்கு மாற நினைக்கும் மான்செஸ்டர் யுனைடெட்
லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் முன்னணி அணியாக வலம் வந்த மான்செஸ்டர் யுனைடெட் குழுவுக்கு இப்பருவம் சரியாக அமையவில்லை.தொடர் தோல்விகளாலும் வெற்றிகளை குவிக்க முடியாமலும் அக்குழு திணறி வருகிறது. இதுவரை ஒன்பது ஆட்டங்களை விளையாடிய யுனைடெட், புள்ளிப் பட்டியலில் 14வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் அக்குழுவின் நிர்வாகி எரிக் டென் ஹாக், பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் போர்ச்சுகீசியக் குழுவான ஸ்போர்ட்டிங் லிஸ்பனின் நிர்வாகியான ரூபன் அமோரிம், அடுத்த யுனைடெட் நிர்வாகியாக தேர்தெடுக்கப்பட்டார். 39 வயது ரூபன் நவம்பர் 11ஆம் தேதி யுனைடெட் குழுவுக்கு நிர்வாகியாக பொறுப்பேற்பார். அவர் 2027ஆம் ஆண்டு வரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ரூபன் அணியில் இணையும் வரை இடைக்கால தலைமைப் பயிற்றுவிப்பாளராக ரூட் வான் நிஸ்டெல்ரோய் பொறுப்புவகிப்பார். இதற்கிடையே, மான்செஸ்டர் யுனைடெட் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப்பின் செல்சி அணியுடன் மோதுகிறது. ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி பின்னிரவு 12.30 மணிக்கு (நவம்பர் 4) ஓல்ட் டிராஃபர்ட் அரங்கத்தில் நடக்கிறது. சில நாள்களுக்கு முன்னர் யுனைடெட், ரூட் வான் நிசல்ரோய் தலைமையில் ‘லீக்’ கிண்ணப் போட்டியில் 5-2 என்ற கோல் கணக்கில் லெஸ்டர் சிட்டியை வீழ்த்தியது. யுனைடெட் வீரர்கள் துடிப்புடன் விளையாடிதைப் பார்க்க முடிந்தது, இருப்பினும் பலம் வாய்ந்த செல்சி அணிக்கு எதிராக யுனைடெட் சிரமப்படலாம் என்று காற்பந்து கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். ஓல்ட் டிராஃபர்ட் அரங்கத்தில் செல்சி அணியுடன் விளையாடிய கடைசி 11 ஆட்டங்களில் யுனைடெட் தோல்வியை தழுவவில்லை. ஐந்து வெற்றி, ஆறு சமநிலை என்று யுனைடெட் ஓல்ட் டிராஃபர்ட் அரங்கத்தில் நம்பிக்கையுடன் செயல்பட்டுள்ளது. அதனால் இந்த ஆட்டத்தில் யுனைடெட் வெற்றிபெற முயற்சி செய்யலாம்.செல்சி அணிக்கு கோல் பாமர் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார். அவர் இப்பருவத்தில் கோல் மழை பொழிந்து வருகிறார். அதனால் அவரைக் கட்டுப்படுத்த மான்செஸ்டர் யுனைடெட் முயலும்.தற்போது புள்ளிப் பட்டியலில் 17 புள்ளிகளுடன் ஐந்தாம் நிலையில் உள்ள செல்சி, பருவத்தை முதல் நான்கு இடங்களில் முடிக்க எண்ணம் கொண்டுள்ளது. அதனால் இப்போட்டியை வெல்ல அது கடுமையாகப் போராடும்.சனிக்கிழமை மாலை நிலவரப்படி இங்கிலிஷ் பிரிமியர் லீக் புள்ளிப்பட்டியலில் 23 புள்ளிகளுடன் நடப்பு வெற்றியாளர் மான்செஸ்டர் சிட்டி முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் 22 புள்ளிகளுடன் லிவர்பூல் உள்ளது. 18 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் ஆர்சனல் அணி இருக்கிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
