கிரிக்கெட்: வெற்றியை நோக்கி இந்தியா
மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.மூன்று டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என்று நியூசிலாந்திடம் பறிகொடுத்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் மோசமான தோல்வியைத் தழுவியதால் மூன்றாவது ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய சூழலில் களமிறங்கியது இந்தியா. மும்பையில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 1) காலை தொடங்கிய ஆட்டத்தில் நியூசிலாந்து முதலில் பந்தடித்தது. வில் யங் 71 ஓட்டங்களும் டேரில் மிட்சல் 82 ஓட்டங்களும் குவித்து நியூசிலாந்துக்கு வலுசேர்த்தனர். இறுதியில் நியூசிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்சில் 235 ஓட்டங்கள் எடுத்தது. அதன் பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 77 ஓட்டங்களுக்கு 1 விக்கெட் இழந்து நல்ல நிலையில் இருந்தது. ஆனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் 84 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.இருப்பினும் இரண்டாவது நாள் ஆட்டத்தை (நவம்பர் 2) இந்தியா சிறப்பாகத் தொடங்கியது. ஷுப்மன் கில், ரிஷப் பண்ட் ஜோடி பொறுப்பாக ஆடி ஓட்டங்களை குவித்தது. கில் 90 ஓட்டங்களிலும் பண்ட் 60 ஓட்டங்களிலும் வெளியேறினர். அதன் பின்னர் வாஷிங்டன் சுந்தர் விரைவாக 38 ஓட்டங்கள் குவித்தார். இறுதியில் இந்தியா அதன் முதல் இன்னிங்சில் 263 ஓட்டங்கள் எடுத்து 28 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து தொடக்க முதல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து நியூசிலாந்து வீரர்கள் வெளியேறினர். இருப்பினும் வில் யங் மீண்டும் சிறப்பாக விளையாடி 51 ஓட்டங்கள் எடுத்தார். இரண்டாம் நாள் ஆட்டத்தின் இறுதியில் நியூசிலாந்து அணி 171 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து திணறியது.அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
