பெங்களூரு மருத்துவ நிலையத்தில் தங்கிச் சென்ற மன்னர் சார்ல்ஸ்
பெங்களூரு: பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ் பெங்களூரில் உள்ள ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவ நிலையத்தில் மூன்று நாள் தங்கிச் சென்றதாக புதன்கிழமை (அக்டோபர் 30) தெரிவிக்கப்பட்டுள்ளது.மன்னருடன் அரசியார் கமிலாவும் வந்திருந்ததாகக் கூறப்பட்டது.தனிப்பட்ட முறையில் மூன்று நாள் பயணம் மேற்கொண்டு வந்திருந்த அரச தம்பதி, ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவ நிலையத்தில் தங்கினர். அங்கு யோகா, தியானம் உட்படப் பல்வேறு உடல்நல சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன. ஆயுர்வேத, இயற்கை மருத்துவ முறையிலான சிகிச்சைகள் அவை.‘சௌக்யா’ எனப்படும் அந்த நிலையம், வைட்ஃபீல்டு பகுதிக்கு அருகே 30 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. சார்ல்ஸ் இந்த நிலையத்திற்கு வருகைதந்தது இது முதன்முறை அன்று. 2019ஆம் ஆண்டு தமது 71வது பிறந்தநாளை அவர் இங்குக் கொண்டாடினார். நிலையத்தை நடத்தும் டாக்டர் ஐசக் மத்தாய், மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்ட சிலரில் அடங்குவார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
