ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவோம்: ரிஸ்வான்
லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நவம்பர் 4ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவிலும், 24ஆம் தேதியில் இருந்து ஜிம்பாப்வேயிலும் விளையாடவுள்ளது.இரு நாடுகளிலும் பாகிஸ்தான் தலா மூன்று ஒருநாள், மூன்று டி20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இந்த தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி சில நாள்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. நட்சத்திர வீரர் பாபர் அசாம் அணித் தலைவர் பொறுப்பில் இருந்து விலகியதையடுத்து புதிய அணித் தலைவராக விக்கெட் கீப்பர் முகம்மது ரிஸ்வான் (படம்) நியமிக்கப்பட்டார்.இந்நிலையில், ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவோம் என்று அவர் சூளுரைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ இதற்கு முன்னர் ஆஸ்திரேலிய மண்ணில் பாகிஸ்தான் கடும் சிரமங்களை சந்தித்தது, அதில் எந்த சந்தேகமும் இல்லை. கடந்த சுற்றுப்பயணங்களில் பாகிஸ்தான் அங்கு சரியாக விளையாடவில்லை. அதேநேரம் பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவுக்கு பல சிக்கல்களை கொடுத்துள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இம்முறை பாகிஸ்தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யப் போராடுவோம்,” என்று ரிஸ்வான் கூறினார்.கடந்தமுறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடியபோது பெரும்பாலான ஆட்டங்களில் வெற்றிக்கு அருகே வந்து தோல்வியைத் தழுவினோம். எங்கள் அணியில் சில குறைகள் இருக்கின்றன. அதனை சரி செய்துள்ளோம். இதனால் நிச்சயம் நாங்கள் ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவோம்” என்று ரிஸ்வான் தெரிவித்தார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
