ராட்ரிக்கு ‘பலூன் டி ஓர்’ விருது
பாரிஸ்: கடந்த பருவத்திற்கான ஆகச் சிறந்தக் காற்பந்து வீரருக்கான ‘பலூன் டி ஓர்’ விருதை ஸ்பெயினின் ராட்ரி வென்றார்.மான்செஸ்டர் சிட்டிக்கு விளையாடும் ராட்ரி ‘இது ஸ்பானியக் காற்பந்துக்கு கிடைத்த வெற்றி’ என்று கூறினார். இம்முறை ‘பலூன் டி ஓர்’ விருதை பிரேசிலின் வினிசியஸ் ஜூனியர் வெல்வார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விருதை ராட்ரி தட்டிச்சென்றார். மத்தியத் திடலில் விளையாடும் ராட்ரி கோல்கள் அடிப்பதிலும் தற்காப்பு ஆட்டத்திலும் சிறப்பாகச் செயல்பட்டார். முதல்முறையாக ‘பலூன் டி ஓர்’ விருதை வெல்லும் 28 வயது ராட்ரி கடந்த பருவத்தில் இங்கிலிஷ் பிரிமியர் லிக் கிண்ணம், 2024 யூரோ கிண்ணம் உள்ளிட்ட பல கிண்ணங்களை வென்றார். ‘பலூன் டி ஓர்’ விருதை பல வருடங்களுக்குப் பிறகு ஒரு இங்கிலிஷ் பிரிமியர் லிக் ஆட்டக்காரர் வென்றுள்ளார். 21 வயதுக்கு கீழ் உள்ள ஆகச் சிறந்த விளையாட்டாளர் விருதை ஸ்பெயினின் 17 வயது லாமின் யமால் வென்றார். அவர் பார்சலோனாவுக்கு விளையாடி வருகிறார். ‘பலூன் டி ஓர்’ விருதை ஆக அதிகமாக மெஸ்ஸி 8 முறை வென்றுள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ 5 முறை வென்றுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
