மேன்யூவை வீழ்த்திய வெஸ்ட் ஹேம்
லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட்டை 2-1 எனும் கோல் கணக்கில் வெஸ்ட் ஹேம் தோற்கடித்தது.இந்த ஆட்டம் வெஸ்ட் ஹேமின் லண்டன் விளையாட்டரங்கில் அக்டோபர் 27ஆம் தேதியன்று நடைபெற்றது.ஆட்டம் தொடங்க சில நிமிடங்களிலேயே கோல் போட யுனைடெட்டுக்குப் பல வாய்ப்புகள் கிடைத்தன.ஆனால் அவற்றை அது நழுவவிட்டது.இடைவேளையின் போது ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் இருந்தது.ஆட்டத்தின் 74வது நிமிடத்தில் வெஸ்ட் ஹேம் குழுவின் மாற்று ஆட்டக்காரர் கிரிசென்சியோ சம்மர்வில் கோல் போட்டு தமது குழுவை முன்னிலைக்குக் கொண்டு சென்றார்.ஆனால் ஏழு நிமிடங்கள் கழித்து யுனைடெட் ஆட்டத்தைச் சமப்படுத்தியது.ஆனால் ஆட்டம் முடியும் கட்டத்தில் வெஸ்ட் ஹேமுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.அதைக் கோலாக்கினார் ஜெரோட் போவன்.இதுவே வெஸ்ட் ஹேமின் வெற்றி கோலாக அமைந்தது.மற்றோர் ஆட்டத்தில் ஸ்பர்ஸ் குழுவை 1-0 எனும் கோல் கணக்கில் கிறிஸ்டல் பேலஸ் தோற்கடித்தது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
