கிரிக்கெட்: இந்திய வீரர் ஜெய்ஸ்வால் அரிய சாதனை
புனே: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் தொடக்கப் பந்தடிப்பாளர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரிய சாதனை படைத்துள்ளார்.ஓராண்டில் இந்தியாவில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்தோர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் 22 வயதான ஜெய்ஸ்வால். ஓராண்டில் தாய்நாட்டில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த இரண்டாவது இந்தியர் என்ற மைல்கல்லை எட்டிய ஜெய்ஸ்வால், சற்று நேரத்திலேயே பட்டியலின் முதல்நிலைக்கும் முன்னேறினார். முன்னதாக, குண்டப்பா விஸ்வநாத் ஒரே ஆண்டில் 13 போட்டிகளில் விளையாடி 1,047 ஓட்டங்களைக் குவித்திருந்தார். இந்நிலையில், நியூசிலாந்திற்கு எதிராகப் புனே நகரில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் விஸ்வநாத்தை முந்தினார் ஜெய்ஸ்வால். அவர் 77 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவ்வாண்டில் இந்தியாவில் மட்டும் ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 1,056 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.ஓராண்டில் டெஸ்ட் போட்டிகளில் 30 சிக்சர்களை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இச்சாதனையை நிகழ்த்தியுள்ள இரண்டாவது பந்தடிப்பாளர் என்ற பெருமையும் அவரைச் சேரும். இவ்வாண்டு ஜெய்ஸ்வாலுக்கு இன்னும் ஆட்டங்கள் இருப்பதால், அவர் இச்சாதனையை மேலும் நீட்டிக்கலாம்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
