வலுப்பெற்றுவரும் லிவர்பூலுக்குப் பெரிய சவாலாக ஆர்சனல்
லண்டன்: நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக் பருவத்தில் மிகச் சிறந்த தொடக்கத்தைத் தந்துள்ள லிவர்பூல் காற்பந்துக் குழு, தம் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்து வருவதாக அதன் நிர்வாகி ஆர்னி ஸ்லாட் கூறியுள்ளார்.ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) ஆர்சனலுக்கு எதிரான கடினமான ஆட்டத்துக்கு லிவர்பூல் தயாராகி வரும் வேளையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார். .இந்தப் பருவம் லிவர்பூல் விளையாடியுள்ள எட்டில் ஏழு ஆட்டங்களில் வென்றுள்ளது. அதுபோக, மூன்று சாம்பியன்ஸ் லீக் ஆட்டங்களிலும் அக்குழு வாகை சூடியுள்ளது. இப்போது, ஆர்சனல் உடனான ஆட்டத்தில் வென்று ஏழு புள்ளிகள் வித்தியாசத்தில் லீக்கில் முன்னிலை வகிக்க ஸ்லாட் இலக்கு நிர்ணயித்துள்ளார். ஆர்சனல் குழுவில் முக்கிய ஆட்டக்காரர்கள் இடம்பெறாவிட்டாலும், அதற்கு எதிராகக் கடினமான ஆட்டத்தை தாம் எதிர்பார்ப்பதாக ஸ்லாட் கூறினார். சிறந்த ஆட்டத்திறன் கொண்ட சில வீரர்கள் காயம் காரணமாக லிவர்பூல் உடனான ஆட்டத்தில் களமிறங்க முடியாவிட்டாலும், சவாலைச் சமாளிக்க தம் குழுவில் போதுமான தரம் இருப்பதாக ஆர்சனல் நிர்வாகி மிக்கேல் ஆர்டேட்டா கூறினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
