தொடரும் சவால்கள்: அஞ்சாத செல்சி நிர்வாகி
லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் செல்சி காற்பந்துக் குழுவுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் கடினமான ஆட்டங்களால் அது மனம் துவண்டு விடாது என அதன் நிர்வாகி என்ஸோ மரேஸ்கா கூறியுள்ளார்.கடந்த வாரம் லிவர்பூலிடம் 2-1 எனும் கோல் கணக்கில் தோல்வியுற்ற செல்சிக்கு ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) நியூகாசல் யுனைடெட் உடனான கடினமான ஆட்டம் காத்திருக்கிறது. அதற்கு அடுத்து மான்செஸ்டர் யுனைடெட், ஆர்சனல் என இரு சவால்மிக்க அணிகளும் செல்சியின் உறுதியைச் சோதிக்கவுள்ளன. இந்தப் பருவம் விளையாடியுள்ள எட்டு ஆட்டங்களில் 14 புள்ளிகளைப் பெற்றுள்ள செல்சி, கடந்த இரு ஆட்டங்களில் வெற்றி வாய்ப்பு கிட்டவில்லை. கடந்த வாரம் லிவர்பூலின் பிடியில் தோல்வி கண்டாலும், தம் ஆட்டக்காரர்களைப் பாராட்டியுள்ள மரேஸ்கா, இனிவரும் சவால்களையும் சமாளிக்க தாங்கள் தயார் என உறுதியளித்துள்ளார். லீக் பட்டியலில் செல்சியைவிட இரு புள்ளிகள் மட்டும் குறைவாகப் பெற்றுள்ள நியூகாசல், ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் வெல்வதன்மூலம் செல்சியை முந்த முடியும்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
