ரொறன்ரோவின் அடுத்த மேயராக தெரிவான ஜோன் ரொறி

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
ரொறன்ரோவின் அடுத்த மேயராக தெரிவான ஜோன் ரொறி

கனடாவின் மிகப்பெரிய நகரமான ரொறொன்ரோவின் அடுத்த மேயராக ஜோன் ரொறி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜோன் ரொறி ஒரு முன்னாள் றொஜெர்சின் நிர்வாகியும் வானொலி தொகுப்பாளருமாவார். இவர் 40-சதவிகித வாக்குளாக 393,000 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

டக் போர்ட் 34-சத விதித வோட்டுக்களான 330,000 வாக்குகள் பெற்றுள்ளார். இவர் கடைசி நிமிடத்தில் சகோதரரின் சுகயீனம் காரணமாக அவரின் இடத்தில் போட்டியிட விண்ணப்பித்தார்.

ரொறொன்ரோ பெரும்பாகத்தில் தெரிவாகியுள்ள பல புதிய மேயர்களில் இவரும் ஒருவராவார். டிசம்பர் மாதம் புதிய மேயர்கள் அனைவரும் பதவி ஏற்பார்கள்.

பிரம்ரன் மேயராக லின்டா ஜெவ்ரி தெரிவுசெய்யப்பட்டார். Hazel McCallionனின் 36-வருடகால ஆட்சியின் பின்னர் முதலாவது மிசிசாகா மேயராக Bonnie Crombie தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

றொப் போர்ட் மீண்டும் நகர சபைக்கு திரும்ப வந்து தனது கவுன்சிலர் இருக்கையில் அமர்வார்.

ரொறொன்ரோ நகரசபையில் பல புதிய முகங்களுடன் ஒருவராக ரொறி இருப்பார். முதுபெரும் அரசியல்வாதியான ஜிம் கரிஜியானிஸ் வார்ட் 39-ன் கவுன்சிலராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

2003-ல் டேவிட் மில்லர் 43.26சதவிகித வாக்குளை பெற்று ரொறியை வென்று மேயர் பதவிக்கு வந்தார். அச்சமயம் ரொறி 38.03சதவிகித வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார். 11-வருடங்களின் பின்னர் முன்னாள் புறோகிறசிவ் கொன்சவேட்டிவ் தலைவர் பெரும்பான்மை பெற்று தெரிவாகியுள்ளார்.

இத் தேர்தல்களில் போட்டியிட்ட தமிழர்களில் மார்க்கம் கல்விச் சபைக்கான பிரதிநிதி வொனிற்றா நாதன், மற்றும் ரொறன்ரோ கல்விச்சபைக்கான பிரதிநிதி பார்த்தி கந்தவேள், ஆகியோர் உடன் மார்க்கம் நகராட்சி மன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்களும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மூலக்கதை