புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ஒன்றை, வெகுவாக சிலாகித்து பாராட்டியுள்ளார்
.பார்ப்பதற்கு ஒரு மருந்து பட்டையின் பின் பக்கம் போலவே உள்ளது, அந்த திருமண அழைப்பிதழ்.தமிழ்நாட்டில் உள்ள வேட்டவலம் எனும் ஊரில் நடைபெறவிருக்கும் மருந்துதுறையை சேர்ந்த எழிலரசன் வசந்தகுமாரி ஆகியோரின் திருமண அழைப்புதான், இப்படி புதுமையாக அச்சடிக்கப்பட்டுள்ளது.வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட இந்த திருமண அழைப்பிதழ், சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.
இந்நிலையில், இந்த செய்தி ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்காவின் கவனத்தை ஈர்த்துள்ளது.இதையடுத்து, ‘பார்மசிஸ்ட் ஒருவரின் திருமண அழைப்பிதழ்... இந்நாட்களில் மக்கள் மிகவும் புதுமையானவர்களாக மாறிவிட்டனர்’ என, அழைப்பிதழை இணைத்து, கோயங்கா டுவீட் செய்துள்ளார்.தற்போது கோயங்காவின் இந்த டுவீட்டும் வைரலாகி வருகிறது. கோயங்கா தன்னுடைய 24வது வயதில், ‘சியட்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பொறுப்பை ஏற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
