கனடாவில் இலங்கைத் தமிழருக்கு இருபது மில்லியன் டொலர்
மிசிசாகாவைச் சேர்ந்த குடும்பத் தலைவரான வேலாயுதம் வாமதேவன் என்பவர் ஒன்ராறியோ 6/49 jackpot ஒக்டோபர் மாதத்தின் மத்திய பகுதியில் இடம்பெற்ற அதிஸ்டக் குலுக்கலில் இருபது மில்லியன் டொலர்களை பரிசாகா வென்றுள்ளார்.
மூன்று பிள்ளைகளில் தந்தையான 62 வயதுடைய இவர் கடந்த 20 வருங்களாக தான் இந்த அதிஸ்ட குலுக்கலில் பங்கேற்று வருவதாகவும் இருந்த போதிலும் இவ்வாறு ஒரு அதிஸ்டம் கிடைக்கும் என தான் எதிர்பார்த்திருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
வீட்டு விற்பனை முகவராக செயற்பட்டுவரும் இவர் கடந்த ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி தனது மகனின் பிறந்நாளின் காரணமாக இறுதி நிமிடத்தில் ஒரு சீட்டினை வாங்கியதாகவும் வீட்டுக்கு சென்றதும் அதனை ஒரு அலுமாரியில் வைத்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சில நாடகளின் பின்னர் அந்த நாளுக்குரிய குலுக்கலில் வெற்றி பெற்றவர் மிசிசாகாவைச் சேர்ந்தவர் என்பதை அறிந்து தனது பணப் பையில் இருந்த சீட்டு ஒன்றில் இலக்கத்தை ஒப்பிட்டு பார்த்ததாகவும் அந்த இலக்கங்கள் பொருத்தமற்று இருக்கவே வேறு யாரோ ஒரு மிசிசாகா நபர் வென்றுள்ளார் என நினைத்து விட்டு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும் கடந்த செவ்வாய்க்கிழமை சந்தர்ப்பவசமாக அலுமாரியில் இருந்த சீட்டு ஒன்றினைக் கண்டதாகவும் அதன் இலக்கங்களை ஒப்பிட்டு பார்த்த போது தன்னாலோ தனது குடும்பத்தினராலோ நம்பவே முடியவில்லை எனவும் வாயில் இருந்து பேச்சே வரவில்லை எனவும் அவர் ஆச்சரியம் வெளியிட்டுள்ளார்.
தான் கனடாவில் 30 வருடங்களாக வசித்துவரும் நிலையில் தற்போது இவ்வாறு ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளதாகவும் இன்னமும் அந்த ஆச்சரியத்தில் இருந்து தான் மீளவில்லை எனவும் தெரிவித்துள்ள.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
