பிரிட்டனுடன் வணிகம்டி.சி.எஸ்., முதலிடம்

தினமலர்  தினமலர்
பிரிட்டனுடன் வணிகம்டி.சி.எஸ்., முதலிடம்

பெங்களுரூ : பிரிட்டனுக்கான மென்பொருள் மற்றும் சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் பட்டியலில், உலகளவில் முதலிடத்தை டி.சி.எஸ்., எனும் ‘டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ்’ நிறுவனம் பிடித்துள்ளது என, தொழிலக பகுப்பாய்வு நிறுவனமான, ‘டெக்மார்க்கெட்வியூ’ தெரிவித்துள்ளது.

இதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:பிரிட்டனுக்கான மென்பொருள் மற்றும் சேவைகள் வழங்குவதில், அதிக வருவாய் ஈட்டி, உலகளவில் முதலிடத்தில் டி.சி.எஸ்., நிறுவனம் உள்ளது.கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட நிறுவனங்களை, வருவாய் அடிப்படையில் ஆராய்ந்து, இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. முந்தைய ஆண்டும் டி.சி.எஸ்., நிறுவனம் முதலிடத்தை பிடித்துஇருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

‘ராயல் லண்டன் வெர்ஜின், அட்லான்டிக், நேஷன்வைடு, லண்டன் போக்குவரத்து’ என பலவற்றுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் வாயிலாக, டி.சி.எஸ்., சிறப்பான வருவாயை ஈட்டி உள்ளது. மேலும், பல புதிய நிறுவனங்களும் டி.சி.எஸ்., உடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கின்றன. இதன் காரணமாக வருவாய் அதிகரித்துள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மூலக்கதை