எண்ணெய் விலையை குறைத்தது ‘அதானி வில்மார்’ நிறுவனம்
புதுடில்லி : சமையல் எண்ணெய் தயாரிப்பு நிறுவனமான, ‘அதானி வில்மார்’ எண்ணெய் விலையை, 1 லிட்டருக்கு, 30 ரூபாய் வரை குறைத்துள்ளது.‘அதானி’ குழுமத்தைச் சேர்ந்த, சமையல் எண்ணெய் தயாரிப்பு நிறுவனம் அதானி வில்மார். இந்நிறுவனம், ‘பார்ச்சூன்’ எனும் பிராண்டு பெயரில், தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வருகிறது.
உலகளவில் சமையல் எண்ணெய் விலை வீழ்ச்சி கண்ட நிலையில், அதன் பயன்களை நுகர்வோருக்கு வழங்குமாறு உணவு அமைச்சகம், சமையல் எண்ணெய் நிறுவனங்களை கேட்டுக்கொண்டது. இதற்கான சந்திப்பு, கடந்த 6ம் தேதியன்று நடைபெற்றது.இதன் தொடர்ச்சியாக, அதானி வில்மார் நிறுவனம், அதன் சமையல் எண்ணெய் வகைகளின் விலையை, 1 லிட்டருக்கு 30 ரூபாய் வரை குறைத்துள்ளதாக அறிவித்து உள்ளது.
இந்நிறுவனத்தின் சோயாபீன் எண்ணெய் விலை அதிகளவில் குறைக்கப்பட்டு உள்ளது. சூரியகாந்தி எண்ணெய் விலை லிட்டருக்கு, 11 ரூபாய் குறைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.மேலும், விலை குறைக்கப்பட்ட எண்ணெய் வகைகள், விரைவில் விற்பனைக்கு சந்தையை அடையும் என்றும் அதானி வில்மார் நிறுவனம் தெரிவித்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
