கனடா வன்கூவரில் மனைவி கொலை தொடர்பாக கணவர் கைது

CANADA MIRROR  CANADA MIRROR
கனடா வன்கூவரில் மனைவி கொலை தொடர்பாக கணவர் கைது

கனடா வன்கூவரில் 2006ம் ஆண்டில் இடம்பெற்ற பெண்ணொருவரின் கொலை தொடர்பான தடங்களைத் தேடி வந்த பொலிசார் தங்களிற்கு கிடைக்கப்பெற்ற தடயத்தின் அடிப்படையில் கணவரைக் கைது செய்துள்ளனர்.

இவர் காணாமல் போனதாகவே கருதப்பட்டாலும் இவர் இறந்து வராங்களின் பிற்பாடு மேற்படி மாகணத்தில் கண்டெடுக்கப்பட்ட உடலமொன்றின் டி.என்.ஏ கூறுகள் மேற்படி பெண்ணின் டி.என்.ஏ.யின் கூறுகளுடன் ஒத்துப் போனதையிட்டு அவரது மரணம் உறுதி செய்யப்பட்டது.

நிச்சயிக்கப்பட்ட திருமண ஏற்பாட்டில் கனடாவிற்கு வருகை தந்த மேற்படி பெண் 2006ம் ஆண்டில் காணாமல் போனார். இவர் தனது இந்தியாவிலுள்ள குடும்பத்தாருடன் பல நாட்களாகத் தொடர்பு கொள்ளாததையடுத்து அவர்களின் உறவினர்களே இவர் காணமல் போனதான முறைப்பாட்டைக் கொடுத்தனர்.

ஆரம்பத்தில் சில தகவல்கள் இவரது காணாமல் போன சம்பவம் குறித்துக் கிடைத்தாலும், இவர் கொலை செய்யப்பட்டதற்கு ஆதாரமான தகவல்களை கடந்த ஏழு வருடங்களாகத் தேடி வந்த பொலிசார் மேற்படி தடயம் கிடைத்ததும் கணவரை கைது செய்துள்ளனர்.

கொலை தொடர்பான சந்தேகப்பார்வை கணவர் மீதே பொலிசாருக்கு ஏற்பட்டிருந்தாலும் கொலையை அவர் தான் செய்தார் என்பதை உறுதிப்படுத்தும் தடயத்திற்காகவே பொலிசார் இதுவரைக் காத்திருந்து கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3,236 total views, 18 views today

மூலக்கதை