டி.சி.எஸ்., சந்தை மதிப்புரூ.55 ஆயிரம் கோடி சரிவு
புதுடில்லி–டி.சி.எஸ்., எனும் ‘டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்’ நிறுவனத்தின் பங்குகள் விலை, நேற்று கிட்டத்தட்ட 5 சதவீதம் சரிவைக் கண்டதை அடுத்து, அதன் சந்தை மதிப்பில் 54 ஆயிரத்து 831 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், டி.சி.எஸ்., நிறுவனம், சந்தை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத காரணத்தால், வர்த்தகத்தின் துவக்கத்தில், அதன் சந்தை மதிப்பு 54 ஆயிரத்து, 831 கோடி ரூபாய் குறைந்து, 11.40 லட்சம் கோடி ரூபாயாக சரிந்தது.இந்நிறுவனத்தின் நிகர லாபம், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், 5.2 சதவீதம் அதிகரித்து, 9,478 கோடி ரூபாயாக இருந்தது.இருப்பினும், இதன் செயல்பாட்டு லாப வரம்பு குறைந்து, முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத காரணத்தால், சந்தையில் சரிவைக் காண நேரிட்டது. நேற்று வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையில், டி.சி.எஸ்., நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 4.64 சதவீதம் சரிந்து, 3,113.25 ரூபாயாக இருந்தது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
