கனடாவில் வீடுகளின் விலை உயர்வு

CANADA MIRROR  CANADA MIRROR
கனடாவில் வீடுகளின் விலை உயர்வு

கனடாவில் வீடுகளின் சராசரி விலை உயர்ந்து விட்டதாகவும், அதே நேரம் விற்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.கனடாவின் வீட்டு சந்தை குறித்து ராயல் லீ பேஜ் என்ற நிறுவனம் சமீபத்தில் ஆய்வு நடத்தியது.

இது குறித்து ராயல் லீ பேஜ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கூறுகையில், மூன்றாம் காலாண்டில் ஜீலை மாதத்தில் விற்பனை நன்றாக இருந்ததாகவும், ஆகஸ்ட் மாதம் 9 சதவிகிதம் குறைந்ததாகவும், செப்டம்பரில் இன்னும் குறையும் என்றும் தெரிவித்துள்ளார்.

டொரண்டோ மாகாணத்தில் கடந்தாண்டை விட இந்த ஆண்டு வீடுகளின் விற்பனை 21 சதவிகிதம் குறைந்துள்ளது.

வான்கூவரில் கடந்தாண்டு செப்டம்பரை விட இந்த செப்டம்பரில் 32.5 சதவிகிதம் வீடுகளின் விற்பனை குறைந்துவிட்டது.

கனடாவில் இரட்டை மாடி கட்டிடத்தின் விலை 4 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும், தனி மனைகளின் விலை 4.8 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

3,186 total views, 18 views today

மூலக்கதை