இறந்த BC மாகாண பெண்ணிற்கு எதிராக இணையதளத்தில் குறிப்பை பதிவு செய்த நபர் வேலை நீக்கம்
பிரிட்டிஷ் கொலம்பியாவில் இறந்த பெண்ணிற்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட இணையதளத்தில் சர்ச்சைக்குரிய குறிப்பை பதிவு செய்ததை தொடர்ந்து துணிக்கடையில் வேலை செய்யும் ஒரு நபரை கடையின் நிர்வாகம் வேலையை விட்டு நீக்கியுள்ளது.
இணையதளத்தில் மிரட்டல் மற்றும் வம்புக்கிழுக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொண்ட Amanda Todd என்ற பெண்ணிற்கு எதிராக மோசமான குறிப்பை பதிவு செய்ததை தொடர்ந்து அந்த நபர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.
கால்கேரி நகரத்தை சேர்ந்த ஒரு பெண்மணி குறிப்பை இணையதளத்தில் பார்க்க நேரிட்டது. சம்பந்தப்பட்ட நபரின் அடையாளத்தை சமூக வலைதளமான Facebook மூலம் கண்டறிந்து அவர் வேலை செய்த நிறுவனத்திற்கு நபரை வேலை நீக்கம் செய்யக்கோரி கடிதம் அனுப்பினார்.
தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் நபரை வேலை நீக்கம் செய்ததாகவும் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி குறிப்பிட்டுள்ளார். பெண்ணுடைய மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
25,047 total views, 162 views today




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
