இறந்த BC மாகாண பெண்ணிற்கு எதிராக இணையதளத்தில் குறிப்பை பதிவு செய்த நபர் வேலை நீக்கம்

CANADA MIRROR  CANADA MIRROR
இறந்த BC மாகாண பெண்ணிற்கு எதிராக இணையதளத்தில் குறிப்பை பதிவு செய்த நபர் வேலை நீக்கம்

பிரிட்டிஷ் கொலம்பியாவில் இறந்த பெண்ணிற்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட இணையதளத்தில் சர்ச்சைக்குரிய குறிப்பை பதிவு செய்ததை தொடர்ந்து துணிக்கடையில் வேலை செய்யும் ஒரு நபரை கடையின் நிர்வாகம் வேலையை விட்டு நீக்கியுள்ளது.

இணையதளத்தில் மிரட்டல் மற்றும் வம்புக்கிழுக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொண்ட Amanda Todd என்ற பெண்ணிற்கு எதிராக மோசமான குறிப்பை பதிவு செய்ததை தொடர்ந்து அந்த நபர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.

கால்கேரி நகரத்தை சேர்ந்த ஒரு பெண்மணி குறிப்பை இணையதளத்தில் பார்க்க நேரிட்டது.  சம்பந்தப்பட்ட நபரின் அடையாளத்தை சமூக வலைதளமான Facebook மூலம் கண்டறிந்து அவர் வேலை செய்த நிறுவனத்திற்கு நபரை வேலை நீக்கம் செய்யக்கோரி கடிதம் அனுப்பினார்.

தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் நபரை வேலை நீக்கம் செய்ததாகவும் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.  பெண்ணுடைய மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

 

 

25,047 total views, 162 views today

மூலக்கதை