பல்கலைக்கழகத்தில் படுகொலைக்கு திட்டமிட்டார் – தற்கொலை செய்த மாணவர் மீது குற்றச்சாட்டு

CANADA MIRROR  CANADA MIRROR
பல்கலைக்கழகத்தில் படுகொலைக்கு திட்டமிட்டார் – தற்கொலை செய்த மாணவர் மீது குற்றச்சாட்டு

புளொரிடா பல்கலைக்கழகத்தின் முன்னைநாள் மாணவரான ஜேம்ஸ் சீவகுமாரன் திட்டமிட்டிருந்தார் என அவரது தற்கொலை தொடர்பாக விசாரித்து வரும் பொலிசார் தெரிவித்துள்ளர். அவர் ஆயுதங்களை தொடர்ச்சியாக வாங்கி தனது அறையில் வைத்திருந்ததே இவ்வாறான சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.

சக மாணவரொருவரை நோக்கி துப்பாக்கியை ஜேம்ஸ் ஒலிவர் சீவகுமார் நீட்டினார் என்றும் அந்த மாணக்கர் அதை முறைப்பாடு செய்த அடுத்த நிமிடமே தனது அறைக்கு சென்ற ஜேம்ஸ் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு இறந்துள்ளார் எனவும் தெரியவருகிறது.

அவரது அறையில் கண்டெடுக்கப்பட்ட கனரகத் துப்பாக்கியும் அதற்கான தாராளமான ரவைகளும் பல கொலைகளை நிகழ்த்துவற்குப் போதுமானவை என்று தெரிவித்த பொலிஸ் அதிகாரி தாக்குதல் திட்டமொன்று தொடர்பான விபரத்தை மேற்படி மாணவர் வைத்திருந்தார் என்றும் தெரிவித்துள்ளனர்.

605 total views, 13 views today

மூலக்கதை