இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியாவின் திருத்தங்களை அமெரிக்கா நிராகரித்து விட்டது

CANADA MIRROR  CANADA MIRROR
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியாவின் திருத்தங்களை அமெரிக்கா நிராகரித்து விட்டது

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தில் இந்தியா சமர்ப்பித்த 7 திருத்தங்களை அமரிக்கா நிராகரித்தது.

இந்திய ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.

தாம் முன்வைக்கும் தீர்மானத்துக்கு பாரிய ஆதரவு தேவை என்ற வகையில் இந்தியாவின் திருத்தங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமரிக்கா அறிவித்துவிட்டதாக இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் இறுதிநேரத்தில் தாம் மேற்கொள்ளவிருந்த திருத்தம் தோல்வியடைந்தபோதும் இந்தியா அமெரிக்காவின் தீர்மானத்துக்கு ஆதரவாகவே வாக்களித்ததாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

எனினும் இந்தியா மேற்கொள்ளவிருந்த திருத்தங்கள் எவை என்பது குறித்து இந்திய ஊடகம் தகவல் வெளியிடவில்லை.

837 total views, 18 views today

மூலக்கதை