அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டின் கூரையின் மேல்!

CANADA MIRROR  CANADA MIRROR
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டின் கூரையின் மேல்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கிலெண்டேல் எனுமிடத்தில் வசித்து வரும் ராபேட் வின் கலினா தம்பதியினர் காரில் சென்று கொண்டிருந்தனர். கார் ஒரு சரிவான பாதையில் திரும்பும்போது திடீரென காரின் பிரேக் வேலை செய்யாததால் கட்டுப்பாட்டை இழந்த கார் 6 அடி உயரத்திற்கு மேல் பாய்ந்து அருகிலிருந்த சுவரைத்தாணடி ஒரு வீட்டின் கூரையின் மேல் நின்றுவிட்டது.

கார் கட்டுப்பாட்டை இழந்தவுடன் முன்னாலிருந்த காற்றுப்பைகள் விரிவடைந்ததால் காரினுள் இருந்த இருவருக்கும் என்ன நடந்ததென்று தெரியவில்லை. கார் நின்றதும் கதவைத்திறக்க முயன்ற போதுதான் கலினாவிற்குத் தங்களது கார்  ஒரு வீட்டுக் கூரையின் மேல் ஏறியிருப்பது தெரிந்தது.

அவ்வீட்டினுள் 80 வயதுடைய முதியவர் ஒருவர் இருந்திருக்கின்றார். சத்தத்தைக்கேட்டு அவர் பயந்தபோதும் எந்த வித ஆபத்தும் ஏற்படவில்லை. உதவிக்கு வந்த மக்களும் காவல் துறையினரும் இருவரையும் பாதுகாப்பாக கீழே இறக்கினர்.

1,432 total views, 18 views today

மூலக்கதை