வலிமை குறைந்ததாக எப்பொழுதெல்லாம் நினைக்கிறதோ அப்போதெல்லாம் பாஜக வன்முறையை தூண்டிவிடுகிறது: மல்லிகார்ஜூன கார்கே!
டெல்லி: வலிமை குறைந்ததாக எப்பொழுதெல்லாம் நினைக்கிறதோ அப்போதெல்லாம் பாஜக வன்முறையை தூண்டிவிடுகிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார். கடந்த வாரம் ராம நவமி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டங்களின்போது பீகார், மேற்குவங்காளம், மராட்டியம் போன்ற மாநிலங்களில் வன்முறை சம்பவம் நடந்தேறியது. பீகாரின் நலாந்தா, சஸாரம் போன்ற பகுதியில் கலவரம் ஏற்பட்டதில், ஒருவர் கொலை செய்யப்பட்டார். 6 பேர் படுகாயமடைந்தனர். அப்பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ராம நவமி பண்டிகையில் ஏற்பட்ட வன்முறைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: வலிமை குறைந்ததாக எப்போதெல்லாம் நினைக்கிறதோ அப்போதெல்லாம் பாஜக வன்முறையை தூண்டிவிடுகிறது. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் வன்முறையை தூண்டிவிட்டு பாஜக ஆதாயத்தை தேடுகிறது. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வாதாட முடியாது ஆனால் ஒன்றிய அரசுக்கு எதிராக போராடலாம் என்று கூறியுள்ளார். அவர்கள் (மையம்) அதானி வரிசையில் ஜேபிசியை உருவாக்க விரும்பவில்லை. நாடாளுமன்றம் செயல்படாது என்று திட்டமிட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
