கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் தமிழர்கள் அதிகமுள்ள 2 அல்லது 3 தொகுதிகளில் போட்டியிட அதிமுக விருப்பம்.!
பெங்களூரு: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் 2 அல்லது 3 தொகுதிகளில் போட்டியிட அதிமுக விருப்பம் தெரிவித்திருக்கிறது. தமிழர்கள் அதிகமுள்ள 10 தொகுதிகளில் 2 அல்லது 3-ல் போட்டியிட அதிமுக தலைமை விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. கர்நாடக சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தமிழர்கள் அதிகமுள்ள 10 தொகுதிகளில் 2 அல்லது 3-ல் போட்டியிட அதிமுக தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது. மொத்தம் 224 தொகுதிகளில் 10 தொகுதிகளில் தமிழர்கள் அதிகமாக வசிக்கின்றனர். ஒட்டுமொத்த வாக்குவங்கியில் 5% தமிழர்கள் வசித்து வருகின்றனர்.பெங்களூரு, கோலார், ஆகிய பகுதிகளில் பாஜகவிடம் கேட்டுப்பெற அதிமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 1983,1989,1999 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. காந்திநகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முனியப்பா என்பவர் வெற்றி பெற்றிருக்கிறார். பெங்களூரு மாநகராட்சியில் அதிமுக சார்பில் 9 பேர் கவுன்சிலர்களாக இருந்துள்ளனர். கேஜிஎப் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பக்தவச்சலம் 3 முறை வெற்றி பெற்றுள்ளார். கர்நாடக சட்டமன்றத்தேர்தலில் ஏற்கனவே சில முறை அதிமுக வென்ற வரலாறு உள்ளது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
