கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு வந்த சுற்றுலா பஸ் கவிழ்ந்து மூதாட்டி, சிறுவன் பலி: 40 பேர் படுகாயம்
ஒரத்தநாடு: கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த ஆம்னி பஸ் தஞ்சாவூர் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூதாட்டி, 9 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தனர். 40 பேர் படுகாயம் அடைந்தனர். கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணிக்கு 51 பயணிகளுடன் நேற்றுமுன்தினம் இரவு ஆம்னி பஸ் சென்றது. பஸ்சை டிரைவர் சமீர் ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை 5.30 மணியளவில் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வழியாக ஒக்கநாடு கீழையூர் பகுதி சாலை வளைவில் பஸ் திரும்பியபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வலதுபுறமாக இரும்பு தடுப்பில் மோதி கவிழ்ந்தது. பஸ்சில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி மரண ஓலமிட்டனர். இதில், திருச்சூர் அருகே நெல்லிக்குன்னத்தை சேர்ந்த லில்லி(55), கடைசி இருக்கையில் படுத்திருந்த ஜெரால்டு (9) ஆகிய 2 பேர் தலை நசுங்கி இறந்தனர். அப்பகுதியினரும், தீயணைப்பு படையினரும், போலீசாரும் வந்து பஸ் இடிபாட்டில் சிக்கி தவித்த 40 பேரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து காரணமாக நேற்று காலை 5.30 மணியில் இருந்து 8.30 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
