எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க தேர்தலுக்கு முன் காங். உள்கட்சி பூசலை சரி செய்ய வேண்டும்: தேவ கவுடா பேட்டி
பெங்களூரு: எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க, பொது தேர்தலுக்கு முன், காங்கிரஸ் உள்கட்சி பூசலை சரி செய்ய வேண்டும்,’’ என்று முன்னாள் பிரதமர் தேவ கவுடா தெரிவித்துள்ளார்.முன்னாள் பிரதமர் தேவ கவுடா பெங்களூருவில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கர்நாடக மாநில தேர்தல் களத்தில் பாஜ, காங்கிரஸ் என்ற இரு தேசிய கட்சிகளிடையே வலுவான போட்டி இருந்தாலும், இதில் மதசார்பற்ற ஜனதா தளம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மதசார்பற்ற ஜனதா தளம் (மஜத) ‘பஞ்சரத்னா’ என்ற அனைத்தையும் உள்ளடக்கிய சமுதாய வளர்ச்சியின் அடிப்படையில் ஓட்டு கேட்க உள்ளது. தேசிய கட்சிகள் மஜத.வின் எல்லை பழைய மைசூரு வரை மட்டுமே என்ற விதத்தில் தவறாக பிரசாரம் செய்கின்றன. அதை தாண்டி வெற்றி பெற்று, மஜத ஆட்சி அமைத்து பஞ்சரத்னா திட்டத்தை அமல்படுத்தும். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க, பொது தேர்தலுக்கு முன், காங்கிரஸ் உள்கட்சி பூசலை சரி செய்ய வேண்டும் ,’’ என்று கூறினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
